Type Here to Get Search Results !

யாராவது திருவள்ளுவர் இந்துதர்மம் இல்லை என்றால் இந்த ஆதாரம்

.. திருவள்ளுவர் சானதான  தர்மத்தை ..
அதை அவரின் பல குறள்கள் பிரதிபலிக்கின்றன..
அவர் ஒரு ஜைனர், சமணர் என்றெல்லாம் சொல்லி நம்மை குழப்பியது கருணநிதி.. ஆனால் திருவள்ளுவர் ஒரு முழு இந்து .
அதற்க்கான சாட்சியாக சில குறள்களை சமர்ப்பிக்கிறேன்..

குறள் 10 :

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை, அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள என்று சொல்கிறது?

குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

விளக்கம்:

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்
சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்

உலகத்தை அளந்த கடவுள் யார்?
வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்...

குறள் 1103 :

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

தாமரைக் கண்ணனுடைய உலகம்,
தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும்
துயில்போல் இனிமை உடையதோ?

இதில் கண்ணனை நேரடியாகவே குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
வருகிறார்கள் 

குறள் 134 :

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?

குறள் 25 :

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

விளக்கம்: அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.

இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம் எது?

குறள் 167 :

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்?

இவ்வளவு தெளிவா சொல்லி இருக்கு திருக்குறள்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.